- மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி
- திருச்சி
- நிலை
- திருச்சி தேவர்ஹால்
- திருச்சி மாவட்ட அமெச்சூர் பவர்லிஃப்டிங் சங்கம்
- புதுக்கோட்டை
- சென்னை
- மதுரை
- நெல்லை
- தஞ்சாவூர்
- கோயம்புத்தூர்
திருச்சி, பிப்.16: மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி திருச்சி தேவர்ஹாலில் நேற்று நடந்தது. திருச்சி மாவட்ட அமெச்சூர் வலுதூக்கும் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டிகளில் திருச்சி, புதுக்கோட்டை, சென்னை, மதுரை, நெல்லை, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வயது, எடை அடிப்படையில் போட்டிகள் தனித்தனியே நடந்தன. போட்டிகளை வலுதூக்கும் சங்கத்தலைவர் கலைசெல்வன், செயலாளர் சிவகுமார் தொடங்கி வைத்து, வெற்றி வீரர், வீராங்களைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
