×

பேராவூரணி அருகே 5 பேரை கடித்த வெறிநாய் கால்நடைதுறையினர் தாமாக முன்வந்து வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி: பொதுமக்கள் பாராட்டு

பேராவூரணி, பிப். 16: பேராவூரணி அருகே உள்ள சோழகனார் வயல் கிராமத்தில் வெறிநாய் ஒன்று பொதுமக்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கால்நடைகளை கடித்தது. இதில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 5 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி தவணை முறையில் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் விஜயராகவன் வழிகாட்டுதலின்படி, சோழகனார்வயல் கிராமத்தில் 25 வளர்ப்பு நாய்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட மாடுகள், ஆடுகள் மற்றும் நாய்களுக்கு இரண்டாம் தவணை வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கால்நடைத்துறை மருத்துவர்கள் சுரேஷ், விவேக், பிரகாஷ் தலைமையிலான குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொண்டனர். தகவல் அறிந்து தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்ட கால்நடை துறையினரை கிராமத்தினர் பாராட்டினர்.

 

Tags : Peravoorani Veterinary Department ,Peravoorani ,Cholakanar Vyaal ,Peravoorani Government Hospital ,
× RELATED திண்டுக்கல் அருகே கஞ்சா விற்றவர் கைது