×

துறையூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

துறையூர், பிப். 16:திருச்சி மாவட்டம் துறையூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தலைமை வகித்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை மங்களப் பொருட்களான, சில்வர் தாம்பாளம், மஞ்சள் ,குங்குமம், வளையல், இனிப்பு காரம் பூ உள்ளிட்ட பொருட்களை வழங்கி. கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ சரவணன், துறையூர் ஒன்றிய குழு முன்னாள் சேர்மேன் சரண்யா மோகன் தாஸ், தலைமை பொதுக்குழு பூபதி, மாவட்ட பிரதிநிதி நடுவலூர் செல்வகுமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மலர்கொடி, அலுவலக கண்காணிப்பாளர் பழனிசாமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா, மேற்பார்வையாளர்கள் கிருஷ்ணவேணி, ஜோதி, சரோஜா, கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வையாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

 

Tags : Thuraiyur ,Thuraiyur Private Marriage Hall ,Child Development Project ,Thuraiyur, Trichy district ,MLA ,Stalin Kumar ,
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயாளி தற்கொலை