- முதல் அமைச்சர்
- நாகர்கோவில்
- கான்கார்டியா பள்ளி
- குமாரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- கன்னியாகுமாரி
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவிற்கு நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கின. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு நேரில் வழங்குவதற்காக வரும் பிப்ரவரி 24ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
பிப்ரவரி 25ம் தேதி காலையில் நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்டமான அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், குமரி மாவட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழா நடைபெறும் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று மேடை மற்றும் பயனாளிகள் அமருவதற்கான பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும் காங்கிரீட் பாதை அமைத்தல் போன்ற பணிகளிலும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணிகளை கலெக்டர் அழகுமீனா, எஸ்.பி ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரண், நாகர்கோவில் ஆர்டிஒ காளீஸ்வரி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மைதானத்தில் மேடை, பந்தல் அமைக்கும் இடங்கள், விஐபிக்கள், பொதுமக்கள், பயனாளிகள் வரும் பாதைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக மைதானத்தில் கூடுதலாக பாதைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பயனாளிகள் வருகின்ற வாகனங்களை நிறுத்தி வைக்க பார்க்கிங் வசதிகள் தொடர்பாகநாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட பகுதிகளையும் கலெக்டர் அழகுமீனா பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் அழகுமீனா புத்தளம், கல்லடிவிளையில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்வு நடைபெறும் இடம், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அலங்கார வளைவு விழா, நாகர்கோவிலில் பொன்னப்பநாடார் முழு உருவச்சிலை பகுதிகள் ஆகியவற்றையும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்
