கொல்கத்தா: மேற்குவங்கத்தில் காலியாக இருந்த பயணிகள் ரயில் பெட்டியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வா ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் கட்வா-அசிம்கஞ்ச் பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிட நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். விபத்து நடந்தபோது ரயில் பெட்டிகள் காலியாக இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
