‘‘விஜய் நடிகர் என்பதால் மக்கள் வருகின்றனர்’’ வான்கோழி மயிலாக முடியுமா?: அதிமுக மாஜி அமைச்சர் விமர்சனம்

தூத்துக்குடி: தூத்துக்குடி, டூவிபுரம் 5வது தெருவில் அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 2021 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக மீண்டும் போட்டியிடும்.

தவெக தலைவர் விஜய், அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாவை மறந்துவிட்டனர் என்று கூறுகிறார். விஜய் அவரையே அவர் மறந்துவிடுவார். மேடைக்கு மேடை மாற்றி, மாற்றி பேசுகிறார். வான்கோழி மயிலாக முடியுமா? விஜய் வெளியில் வரமாட்டார். சினிமாவில் 10 பேரை அடிப்பார். அதனால் அவர் கால்களை பார்க்கதான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே அவரை பார்க்கின்றனர். நடிகை கடை திறக்க வந்தாலும் கூட்டம் கூட தான் செய்யும். இவ்வாறு கூறினார்.

Related Stories: