சியோல்: வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் அடிக்கடி ஏவுகணைகள், அணு ஆயுத சோதனைகள் நடத்தி அருகில் உள்ள தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டி வருகிறார். இந்த நிலையில், கிம் ஜோங் உன்னின் மகளான கிம் ஜூ ஏ நாட்டின் எதிர்கால தலைவராக நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் வந்துள்ளன. கிம் ஜோங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ(13) கடந்த 2022ல் முதன் முதலில் பொதுவெளியில் தோன்றினார். அதன் பிறகு ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில் அவரது தந்தையுடன் கலந்து கொண்டு வருகிறார். இந்த மாத இறுதியில் வட கொரிய தொழிலாளர் கட்சியின் பிரமாண்ட மாநாடு நடக்கிறது. இதில் கிம் ஜூ ஏ வை தனது வாரிசாக நியமிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
