வாட்ஸ்அப் பயன்படுத்த ரஷ்யாவில் திடீர் தடை

மாஸ்கோ: அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப்பை உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ் அப்புக்கு ரஷ்யா திடீரென தடை விதித்துள்ளது. இதுகுறித்து மெட்டா நிறுவனம் தனது அறிக்கையில்,’ ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேக்ஸ் செயலியை பிரபலமாக்க அந்த நாடு தீவிரமாக உள்ளது. ரஷ்யாவில் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். அதை ஒழித்து கட்டும் வகையில் ரஷ்யா வாட்ஸ் அப்புக்கு தடை விதித்துள்ளது ’ என குறிப்பிட்டுள்ளது.

Related Stories: