சாத்தூர், பிப்.14: சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுக, பாஜ, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன் மற்றும் மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
