130 பேருக்கு இ-பட்டா வழங்கல்

திண்டுக்கல், பிப். 14: திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு ஆர்.வி.நகர் மற்றும் 16வது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் பகுதி மக்களுக்கு இ- பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் திருமலை தலைமை வகித்தார். திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு 130 நபர்களுக்கு இ- பட்டா வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சுல்தான் சிக்கந்தர், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், பகுதி செயலாளர் பஜூலுல்ஹக், மாமன்ற உறுப்பினர்கள் கணேசன், மாரியம்மாள், நியமன மாமன்ற உறுப்பினர் உமா சங்கர், வார்டு செயலாளர் செந்தில்குமார், வார்டு பொறுப்பாளர் அம்சா லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: