தா.பழூரில் வெல்லும் தமிழ் பெண்கள் மகளிருக்கான பயிற்சி கூட்டம்

தா.பழூர், பிப்.14: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தா.பழூர் ஒன்றிய கழக அலுவலகத்தில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மகளிருக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தா.பழூர் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் அண்ணாதுரை முன்னிலையில் விதித்தார்.

இந்தகூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் லதா பாலு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி இராஜேந்திரன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மீனா சாமிநாதன், ஸ்டாலின் பெண்கள் படை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மலர்விழி ரஞ்சித்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் அன்பரசன், தா.பழூர் கிழக்கு, மத்திய ஒன்றிய நிர்வாகிகள், மகளிர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Related Stories: