அருமனை, பிப்.14: அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியில் உள்ள நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல் நடந்தது. இதில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 3 பேர் வின்டோரிக்ஸ் நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட நேர்காணலில் தேர்வாகி பணி ஆணை பெற்றுள்ளனர். மாணவர்கள் சஜீஷ் அலெக்ஸாண்டர், ஜா மற்றும் ஆரதி ஆகியோர் பணியமர்த்தல் வாய்ப்பை பெற்றனர். மாணவர்களுக்கு பணியமர்த்தல் ஆணைகளை நாராயணகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பாலாஜி சித்தார்த், கல்லூரி முதல்வர் சிவபிராகாஷ் ஆகியோரது முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே பணி நியமன ஆணை பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
