முகில் சட்ட கல்லூரியில் தேசிய தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி

நாகர்கோவில், பிப்.14: கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு பகுதியில் அமைந்துள்ள முகில் சட்டக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கிய 2வது தேசிய தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டிகள் இன்று நிறைவடைகிறது. போட்டியின் தொடக்க விழா கடந்த 12ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீதித்துறை மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் குழித்துறை சார்பு நீதிபதி சுந்தரி, கல்லூரி முதல்வர் முனைவர் ஜெய்லால் மற்றும் இயக்குநர் தாவூத் பீவி அன்வர் கபீர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி போட்டியை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாடு முழுவதிலிருந்தும் 28 சட்டக் கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்று சட்டப் பிரிவுகள் மற்றும் முன்னோடி தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதஎதிர்வாத முறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர். நிறைவு விழாவான இன்று (14ம் தேதி) வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ.21,000 மற்றும் சான்றிதழ், இரண்டாம் பரிசாக ரூ.15,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Related Stories: