சேத்தியாத்தோப்பு அருகே வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

சேத்தியாத்தோப்பு, பிப். 14: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள விஜயா -சின்னையன் தம்பதியரின் வீடு நேற்று மிக்கசிவின் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீட்டின் உள்ளே இருந்தே பொருட்கள் தீயினால் எரிந்து சேதமடைந்தன. வீட்டின் உரிமையாளர் விஜயா- சின்னையன் தம்பதியினர் தீ விபத்து ஏற்பட்டபோது வெளியே சென்றிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அருகில் இருந்தவர்கள் சேத்தியாத்தோப்பு தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: