சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் பழைய வீடை இடிக்கும்போது எதிர்பாராத விதமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கவும் அறிவித்துள்ளார்.
