சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.5 ஆயிரத்தை தமிழக அரசு இன்று விடுவித்தது. இதனால் பயனாளிகள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதுபற்றி மகளிர்கள் கூறியதாவது:
வி.சரண்யா (பூந்தமல்லி): பெண்களுக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உண்மையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மாதா மாதம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்த நிலையில், இன்று மொத்தமாக ரூ.5 ஆயிரம் வழங்கியது அனைத்து மகளிருக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
செல்வி (திருவேற்காடு): இன்று காலை எனது செல்போனில் வங்கி கணக்கை பார்த்ததும், எங்களுக்கு பொழுது நன்றாக விடிந்திருக்கிறது. பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மிகப்பெரிய வரப்பிரசாதம். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்த நிலையில், தற்போது மகளிர் உரிமைத் தொகையை மொத்தமாக ரூ.5 ஆயிரம் கொடுத்திருப்பது மிக சந்தோஷமான விஷயம். தமிழகத்தில் தொரட்டும் விடியல் ஆட்சி.
ஜோதி அப்பாவு (நெய்தவாயல்): தனியார் நிறுவனத்தில் எனது கணவர் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். தற்போது எனது வங்கி கணக்கில் முதல்வர் கொடுத்த ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமை தொகை, எனக்கும் என் கணவருக்கும் மாத குடும்ப செலவுக்கு பயன்படும். முதல்வருக்கு நன்றி.
காமாட்சி (திருவொற்றியூர்): திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, அனைத்து மகளிர் மற்றம் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களை அறிவித்துள்ளது. தற்போது திடீரென 3 மாதங்களுக்கும் சேர்த்து ரூ.5 ஆயிரம் மகளிர் உறுதி தொகையாக முதல்வர் வழங்கியதால், நடுத்தர மற்றும் ஏழ்மை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பயனளிக்கும்.
ராதா (பெரம்பூர்): இன்று காலை அனைத்து மகளிரின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருப்பது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் நேரத்தில் 3 மாதங்களுக்கு பணம் வராது என நினைத்திருந்தோம். இதை முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு, அனைத்து பெண்களுக்கும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமை தொகை வழங்கியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களது நன்றியை முதல்வருக்கு காட்டுவோம்.
செஞ்சி லட்சுமி (பெரம்பூர்): திமுக ஆட்சிக்கு வந்தபோது, மகளிருக்கு மாதம் ரூ.1000 தருவது சாத்தியமில்லை என்று பிற கட்சியினர் தெரிவித்தனர். அதை ஆளும் திமுக அரசு சாத்தியப்படுத்தியது. தற்போது தேர்தல் நேரத்திலும் மகளிருக்கு பணம் சென்றடைவதில் எந்த தடையும் வரக்கூடாது என்பதற்காக, முன்தேதியிட்டு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளனர். இப்பணம் நல்ல முறையில் பயன்படும்.
பவானி, சிவகாமி (காஞ்சிபுரம்): கோடை காலத்தில் முதல்வர் ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமை தொகை வழங்கி எங்களை குளிர்ச்சியடைய வைத்திருக்கிறார். இதனால் சின்ன சின்ன பிரச்னைகளை தீர்க்க முடியும். இக்காலத்துல யார் 10 ரூபாயை சும்மா தருவாங்க? ஆனால், ஒரே நேரத்தில் 3 மாதங்களுக்கும் சேர்த்து முதல்வர் ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமை தொகை வழங்கியது சந்தோஷமாக உள்ளது.
ஆர்.சுமதி (மாதவரம்): நானும் என் கணவரும் கூலி வேலை செய்கிறோம். 2 பிள்ளைகள். எங்களுக்கு வருமானம் போதுமானதாக இல்லை. கடந்த ஒரு வருடமாக அரசின் உரிமை தொகை ரூபாய் பெற்று வருவது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது ரூ.5 ஆயிரம் வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணம் எனது மருத்துவ செலவு, வாடகை உள்ளிட்டவைக்கு உதவும். இதற்காக முதல்வருக்கு நன்றி.
கே.விஜயலட்சுமி (மாதவரம்): ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு முதல்வர் கொடுக்கின்ற உரிமை தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் எனது செலவுகளை பார்த்து கொள்கிறேன். தற்போது, ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி.
சாந்தி அபிராமி (தண்டையார்பேட்டை): இந்த பணம், மருந்து வாங்குவதற்கு, பால் வாங்குவதற்கு இப்படி அத்தியாவசிய தேவைக்கு அவசரத்துக்கு உதவியா இருக்கிறது. இப்போது இன்ப அதிர்ச்சியாக ரூ.5 ஆயிரம் வழங்கியிருக்கிறார். வரும் தேர்தலில் திமுகவுக்குதான் ஓட்டு போடுவேன்.
கோடீஸ்வரி (பழைய வண்ணாரப்பேட்டை): இந்த திட்டம் கொண்டு வந்தபோது சாத்தியமில்லை என கூறியவர்கள், திட்டத்தை நிறுத்த எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகலாம் என நினைத்த முதல்வர், தற்போது ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் இருப்பு வைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். வரும் தேர்தலில் திமுக அரசு வெற்றி பெறுவது உறுதி.
மாலா (தரமணி): மகளிர் உதவித்தொகை வந்துள்ளது மிகவும் சந்தோஷம். ஏனென்றால் குடும்ப பட்ஜெட்டில் ஏற்பட்ட துண்டை சமாளிக்க இது பெரும் உதவியாக இருக்கும். இதை கொடுத்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றி.
