வலங்கைமான், பிப். 13: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தாலுகா, திருக்குடி ஊராட்சி பகுதியில் நன்னிலம் தொகுதி எம்எல்ஏ காமராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். இதன் மூலம் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை காமராஜ் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அனைத்து சிறார்களுக்கும் புத்தகப்பைகளை வழங்கினார். இந்த நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமணி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கிளாரா செந்தில், முன்னாள்ஒன்றிய துணைப் பெருந்தலைவர் தென்கோவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
