கரூர், மார்ச் 29: கரூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இந்திய அரசியல் சட்டத்தில் தேர்தல் பணி மிக முக்கியமானது. தேர்தல் தேதி அறிவித்த உடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு முழு அதிகாரமும் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கரூர் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான ரவிகுமார் உத்தரவின் படி அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவர்களுக்கு பயிற்ச்சி வெண்ணெய்மலையில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் வாக்குசாவடி அலுவர்கள் கலந்துகொண்டனர். வாக்குச்சாவடி முகவர்களின் பணிகள் என்னென்ன? ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நேர்மையாக நடக்கிறதா என்பதை நேரடியாக இருந்து உறுதி செய்வது, வேட்பாளர்களின் முகவர்கள்தான். அவர்களின் பணிகள் மகத்தானவை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு முகவர் செல்லவேண்டும். வேட்பாளர், முகவர் 2 பேரும் கையெழுத்திட்ட கடிதம் அவரிடம் இருக்க வேண்டும்.
அதை வாக்குச்சாவடி அதிகாரியிடம் கொடுத்து முகவராக பதிவு செய்து கொண்டு, நியமன அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். மாற்று முகவரும் நியமன அட்டையைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேற வேண்டும். முகவரை மாற்றும்போது மட்டும் அவர் வாக்குச்சாவடிக்குள் வரவேண்டும். உள்பட பல்வேறு விபரம் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
