மதுரை அதிமுக அலுவலகத்தில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்காக அமைப்பது தான் கூட்டணி. தேர்தலில் மக்கள் தான் முடிவெடுப்பார்கள்” என்று கூறினார். அப்போது, ‘‘நடிகர் விஜய் பிரசாரம் துவக்க உள்ளாரே’’ என கேட்டதும், வழக்கமான தனது டிரேட் மார்க் புன்னகையுடன் கையெடுத்து கும்பிட்டு, ‘‘இதற்கு மேல் பேச மாட்டேன்’’ என்றார்.
செல்லூர் ராஜூ பேட்டியளித்து கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த கட்சிக்காரர் ஒருவர் தொடர்ச்சியாக இருமினார். இந்த சத்தத்தை கேட்டதும் செல்லூர் ராஜூ, ‘‘என்னப்பா இருமிட்டே இருக்கீங்க… ஏய்… சிக்கன் குனியாவை பரப்பி விடாதீங்கப்பா… மாஸ்க் மாட்டிகிட்டு வர மறந்துட்டேனே…’’ என்றார். தொடர்ந்து சசிகலா குறித்து கேள்வி எழுப்பியபோது, “நம்மள பழிவாங்க சிலர் சுத்துறாங்க…” என்றார்.
