திருவட்டார்,பிப்.13: நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணி துறை சார்பில் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கல்விச்சுற்றுப்பயணம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தாராவி பகுதியில் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி தாராவி பகுதியில் உள்ள குழந்தைகளின் உந்துதல் மற்றும் தன்முனைவு வளர்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சமூக பணித்துறை தலைவி மேரி பெல்சிட் துவக்கி வைத்தார். துணை பேராசிரியர் அல் அமீன் பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அருட்பணியாளர் ஆன்டோ வினோத்குமார், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தாராவியின் பரபரப்பான வாழ்கையில் குழந்தைகளை சரியான முறையில் வளர்ப்பது குறித்து பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
- நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி
- திருவட்டார்
- சமூகப் பணித் துறை
- நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- மும்பை
- தரவி
