சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 42 பேர் கைது வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே 2வது நாளாக

வேலூர், பிப்.4: வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே 2வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் 2வது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த மறியல் போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க ேவண்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க ேவண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதுதொடர்பாக 42 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்படத்தில் தங்க வைத்தனர்.

Related Stories: