காவேரிப்பட்டணம் அருகே எருதாட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல்

காவேரிப்பட்டணம், பிப்.4: காவேரிப்பட்டணம் அடுத்த பாளேகுளியில் எருதுவிடும் விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து, ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவேரிப்பட்டணம் அடுத்த பாளேகுளியில், எருது விடும் விழா ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் எருது விடும் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ஊரில் உள்ள சிலர் தன்னிச்சையாக செயல்பட்டு எருதுவிடும் விழாவை நடத்துவதாகவும், ஊர்மக்களை கலந்தாலோசிக்கவில்லை என எதிர்ப்பு எழுந்தது. ஊர்மக்களை கலந்தாலோசித்த பின் வேறு தேதியில் எருது விடும் திருவிழா நடத்த வேண்டும் எனக்கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நாகரசம்பட்டி போலீசார் மற்றும் பர்கூர் டிஎஸ்பி தங்கவேல் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கலெக்டர், எஸ்பி, தாசில்தார் ஆகியோரிடம் ஆலோசனை செய்து எருது விடும் விழா வேறு தேதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: