ஓட்டு போட்ட மை காயும் முன்பே வாக்குறுதியை ஸ்பீடா முடிப்பாரு… எடப்பாடியை செமயா கலாய்த்த செல்லூர் ராஜு

 

மதுரை: ஓட்டுப்போட்ட அடையாள மை காயும் முன்பு வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி தருவார் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மேல அனுப்பானடி பகுதியில் அதிமுக சார்பில் நேற்று தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரம் விநியோக நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘ஓட்டு போட்ட அடையாள மை காயும் முன்பே இந்த வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி தருவார்’ என கூறி ஒவ்வொருவரிடமும் வாக்குறுதிகள் அச்சடித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். துண்டு பிரசுரத்துடன் லட்டு, ஜாங்கிரியையும் வைத்து மக்களுக்கு வழங்கினார்.

Related Stories: