நயினார் பேசுனது சின்ன விஷயம்தான்; ஊதி பெரிசாக்குறாங்க… வானதி வக்காலத்து

கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் பாஜ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா, விஜய் குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், ‘‘நயினார் நாகேந்திரன் மிகவும் அன்பாக, அமைதியாக பேச கூடியவர். சட்டப்பேரவையில் கூட அவரை அப்படி தான் சொல்லுவாங்க. நானாவது கொஞ்சம் ஆக்ரோஷமாக ஏதாவது பேசுவேன். ஆனால், அவர் மிகவும் அமைதியாக நாகரிகமாக பேச கூடியவர். அவர் எதனால் திரிஷாவை ரெபர் செய்தார் என தெரியவில்லை. அது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கு. இது குறித்து எனது கருத்தை அவரிடம் நானே கூறுவேன். சின்ன விஷயத்தை பெண்களுக்கு அவமானம் நடந்துவிட்டது போல ஊதி ஊதி பெரிதாக்கி வருகின்றனர்’’ என்று கூறினார்.

Related Stories: