தமிழகத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் நலனைப் பேணுவதில் திமுக அரசு எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. அதன்படி, 1989-90ம் ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞரால் கொண்டுவரப்பட்டது. சொன்னாரு: திமுக தனது 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ‘மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இலவச மின் இணைப்பு’ வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
செஞ்சாரு: ஆட்சிக்கு வந்தவுடன், நிலுவையில் இருந்த சுமார் 4.5 லட்சம் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்க அரசு திட்டமிட்டது. இதன் பின்னர், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கடந்த பத்தாண்டுகளாக நிலுவையில் இருந்த விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் ‘ஒரு லட்சம் மின் இணைப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. 2021-22 நிதியாண்டில், வெறும் ஆறு மாத காலத்திற்குள் 1,00,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கி தமிழக அரசு சாதனை படைத்தது. இந்த மின் இணைப்புகள் வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 3.38 லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாகப் பாசன வசதி பெற்றுள்ளன. இது தமிழகத்தின் உணவு உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வழிவகை செய்துள்ளது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகள் இதனால் பெரும் பயனடைந்துள்ளனர். ‘‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’’ என்ற கலைஞரின் வாக்கிற்கிணங்க, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விவசாயிகளின் மின்சாரக் கனவை நனவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றி, தமிழகத்தை வேளாண் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக மாற்றுவதில் இந்த இலவச மின் இணைப்புத் திட்டம் ஒரு மகுடமாகத் திகழ்கிறது.
3 ஆண்டில் 2.19 லட்சம் இணைப்புகள்
- இந்த திட்டம் தொடங்கப் பட்ட மூன்றரை ஆண்டுகளில் 2.19 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- 2024-25 நிதியாண்டில் விவசாய இலவச மின்சாரத்திற்காக ரூ.6,962 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 2025-26 பட்ஜெட்டில் அது ரூ.8,186 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2021-ல் இருந்த சுமார் 4.52 லட்சம் காத்திருப்புப் பட்டியலில், தற்போது பெரும்பாலான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவர்களுக்கு தட்கல் மற்றும் சாதாரண வரிசை அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
