9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் வருவாய் துறை சங்கத்தினர் சாலைமறியல்

தென்காசி, பிப்.11: தென்காசியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் 6 பெண்கள் 73 பேரை போலீசார் கைது செய்தனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் ‘சிறப்பு பணிபாதுகாப்பு சட்டத்தை’ உடன் இயற்ற வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடன் வழங்கிட வேண்டுமென்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 73 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: