மண்டைக்காடு கோயிலில் ரூ.27.57 லட்சம் உண்டியல் காணிக்கை

குளச்சல், பிப்.11: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நிரந்தர உண்டியல் 10 மற்றும் 7 குடங்கள் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் ஜாண்சிராணி, உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மராமத்து பொறியாளர் ஐயப்பன், ஆய்வாளர் தர்மேந்திரா, கோயில் காரியம் செந்தில் குமார் மற்றும் கோயில் ஊழியர்கள், சுயஉதவிக்குழு பெண்கள்,பக்தர்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.27,57,685 ரொக்கம், 16.650 கிராம் தங்கம், 106.2 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்தன. இது கடந்த செப்டம்பர் மாதம் 15 ம் தேதி முதல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: