ரூ.2.94 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு

மதுரை, பிப். 14: மதுரை செல்லூர் அஹிம்சாபுரத்தை சேர்ந்தவர் அர்ஜூன்(24). இவர் புதிய வீடு கட்ட திட்டமிட்டு இருந்தார். இதை தெரிந்து கொண்ட அண்ணாநகரை சேர்ந்த கவுதம்(34), அவரது மனைவி அத்ரிஜா(29) ஆகியோர் அர்ஜூனை அணுகியுள்ளனர். வீடு கட்ட தேவைப்படும் பணத்திற்கு கடந்த 18.6.2025 அன்று அர்ஜூனை சந்தித்து 21 பவுன் நகையை இருவரும் வாங்கியுள்ளனர். அந்த நகையை ரூ.10.74 லட்சத்திற்கு விற்றுள்ளனர். ஆனால் ரூ.7.80 லட்சத்தை மட்டும் அர்ஜூனிடம் தந்துள்ளனர். மீதி பணம் ரூ.2.94 லட்சத்தை தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் பல முறை கேட்டும் மீதி பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இறுதியாக பணத்தை கேட்ட போது ஒரு கட்டத்தில் அர்ஜூனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து மனஉளைச்சலுக்கு ஆளான அர்ஜூன், மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவர் இது குறித்து செல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தம்பதி மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Related Stories: