விருதுநகர், பிப். 14: விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நவராஜ் (63). இவர் தனது மனைவி ரெஜினா (54) உடன் சூலக்கரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்று முன்தினம் இரவு சென்று இருந்தார். பின்னர் இருவரும் மருத்துவமனை எதிரில் உள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது தம்பதியர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதைடுத்து அவர்களை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரெஜினா உயிரிழந்தார். இடது கால் முறிவுடன் பலத்த காயமடைந்த நவராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
