கொலை முயற்சி வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 11 ஆண்டு சிறை

மதுரை, பிப். 14: மேலுார் அருகே அழகாபுரியைச் சேர்ந்தவர் பாரதி ஜெயசிம்மன். இவர் 2021ல் அங்குள்ள ஒரு கோயிலுக்கு வழிபட சென்றார். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சின்ன கருப்பு (47) என்பவர், பாரதி ஜெயசிம்மனிடம் ‘ஏன் இங்கு வந்தீர்கள்,’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு ஏற்பட்டதில் அவர் அரிவாளால் வெட்ட முயன்றார்.

அதை தடுக்க முயற்சித்த பாரதி ஜெயசிம்மனின் இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அந்த பலத்த காயமடைந்ததால் கை செயலிழந்தது. இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கின் விசாரணை தீண்டாமை வன்கொடுமைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி தாமோதரன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சின்னகருப்புவிற்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

 

Related Stories: