டெல்லி: 2025-26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை பிசிசிஐ நீக்கியுள்ளது. பிசிசிஐ வெளியிட்ட பட்டியலில் ஏ பிரிவில் சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பன்ட், குல்தீப், ஜெய்ஸ்வால், சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
