குத்தபாஞ்சான் ஊராட்சி பரும்பில் ரூ.17 லட்சத்தில் சிமெண்ட் சாலை

ஆலங்குளம், பிப்.10:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தபாஞ்சான் பஞ்சாயத்து கீழபரும்பு குறிஞ்சி நகர் பகுதியில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நிதியின் மூலம் ரூ.17 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் துவக்க விழா நடந்தது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி குமார் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர் பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து துணைத்தலைவர் சுப்புராஜ் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் புதிய சிமெண்ட் சாலைக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார். விழாவில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன், காளத்திமடம் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். களக்காடு அருகே வாலிபர் மீது தாக்குதல் களக்காடு,பிப்.10: களக்காடு அருகேயுள்ள கோதைசேரியை சேர்ந்தவர் சுடலைமுத்து (69). இவருக்கு சொந்தமான வயல் வடுகச்சிமதில் பத்துக்காட்டில் உள்ளது. அதில் அவர் வாழை, நெல் பயிர் செய்துள்ளார்.

இந்நிலையில் சுடலைமுத்துவும், அவரது மகன் நம்பிராஜனும் நெல் பயிருக்கு பூச்சி மருந்து அடித்தனர். அப்போது சுடலைமுத்து வயல் வரப்பில் பூச்சி மருந்து வாளியுடன் வந்தபோது, எதிரே அதே வரப்பில் நடந்து வந்த தொழிலாளி சாமிநாதன் அவரை இடித்து கீழே தள்ளினார். இதைப்பார்த்த நம்பிராஜன் தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சாமிநாதன், நம்பிராஜனை தாக்கினார். காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து இதுதொடர்பாக சாமிநாதனை தேடி வருகின்றனர்.

Related Stories: