திருச்சி, பிப்.10:சிறப்பு வகுப்புகள் நடத்த நேர கட்டுப்பாடு வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது. எஸ்டிபிஐ கட்சி கல்வி பிரிவு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், அக்கட்சி மாவட்ட தலைவர் ரகமத்துல்லா அளித்த மனுவில் கூறுப்பட்டிருப்பதாவது,திருச்சி கல்வி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணி தொடங்கி இரவு 8.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதனால் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர்களை சிரமப்படுத்துவது நியாமல்ல. எனவே அதிகபடியாக மாலை 5.30 மணி வரை மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கு கலெக்டர் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
