திருச்சி குடிபோதையில் எஸ்ஐயை தாக்கிய வாலிபர் கைது

திருவெறும்பூர், பிப்.4: திருவெறும்பூர் எஸ்ஐ செல்வராஜ் நேற்று முன்தினம் நவல்பட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திருவெறும்பூரை சேர்ந்த பாலமுருகன், நேதாஜி நகர் ராஜேந்திரன் மகன் வீரா(எ)வீரமணி(35). கமால் ஆகிய மூவரும் டூவீலரில் வந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சட்டென போலீசார் அவர்களை மடக்கி பிடித்தபோது, டூவீலர் ஓட்டி வந்த வீரமணி குடிபோதையில் இருந்ததாகவும் அதனால் தான் தப்பி செல்ல முயன்றதாகவும் கூறியுள்ளான்.

இதையடுத்து அவனைப்பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது பாலமுருகன், கமால் ஆகிய இருவரும் செல்வராஜிடம் ஆபாச வார்த்தையால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து, அவரை தாக்கி மிரட்டிவிட்டு தப்பியோடினர். எஸ்ஐ செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் வீரமணியை போலீசார் கைது செய்தனர். மேலும் பாலமுருகன் மற்றும் கமால் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

Related Stories: