மேலவாளாடி அருகே அரசு பேருந்து மோதி வாலிபர் பலி

சமயபுரம், பிப். 4: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்கால் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(34). கூலித்தொழிலாளி. நேற்று காலை 8 மணியளவில் நம்பர் ஒன் டோல்கேடில் மீன் வாங்கிக்கொண்டு டூவீலரில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த மேலவாளாடி தெற்கு சத்திரம் மாரியம்மன் அருகே சென்றபோது, எதிரே அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து ராமர் ஓட்டிவந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.

அப்போது, அவரது மார்பு பகுதி பிளந்ததால், இதயம் வெளியே வந்து துடிதுடித்து இறந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே சமயபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Related Stories: