மணப்பாறை, ஜன, 30: வையம்பட்டியில் விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ புகையிலை விற்றவரை கைது செய்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் சரகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து நேற்று சப் இன்ஸ்பெக்டர் மாதேஷ் தலைமையில் போலீசார் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, வீ.பெரியபட்டி கிராமம், அதிகாரிப்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வரும் இன்னாசிமுத்து மகன் கிருபாகரன்(27), தனது கடையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள வையம்பட்டி போலீசார் கிருபாகரனை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.
