எடப்பாடியின் ‘குரு’4வது முறை ஆசை கேட் போட்ட கோர்ட்

 

உளுந்தூர்பேட்டையில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிதான் சென்னை ஜார்ஜ் கோட்டையை ஆளும் வரலாறு உள்ளதாம். கடந்த 8 சட்டமன்ற தேர்தல் பிளாஷ் பேக், வருகிற 2026 பொதுத்தேர்தலிலும் பிரதிபலிக்கலாம் என்பதால் யார் வெற்றி வேட்பாளர்? என்ற பரபரப்பு இப்போதே வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாம்.

இங்கு அதிமுக மாவட்ட செயலாளராக உள்ள குமரகுரு 2016 தோல்விக்குபின் 2024 பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சியில் களமாடினார். ஆனால், திமுக மலையரசனிடம் வீழ்ந்தார். எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் குமரகுரு மீண்டும் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட தலைமையிடம் மனு அளித்துள்ளதோடு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தொகுதியில் களம் இறங்கி விட்டார்.

இருப்பினும் எம்பி சீட்டு வாங்கி வருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று குமரகுரு மோசடியில் ஈடுபட்டதாக மாஜி நிர்வாகி கிருஷ்ணன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குமரகுருவை விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருப்பது அவருக்கு சற்று பின்னடைவாம். இதுதான் நமக்கான சந்தர்ப்பம் என மாஜி பிரதிநிதி ஞானமூர்த்தி உள்ளிட்ட சிலர் மீண்டும் தலைதூக்கி வருகிறார்களாம். இருப்பினும் குருதான் டாப் என ஆதரவு குரல் எழுப்புகிறார்களாம். கூட்டணி கட்சிகளின் சில சகாக்களும் அவருக்ேக ஜால்ரா போடுகிறார்களாம்.

அதேவேளையில் திமுகவில் சிட்டிங் பிரதிநிதி மணிக்கண்ணன் தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளதால், மீண்டும் வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம். அதேபோல் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஏற்கனவே வாய்ப்பை இழந்த வசந்தவேல், வீரபாண்டியன் உள்ளிட்டோரும் நம்பிக்கையுடன் உள்ளார்களாம்.

தொடர்ந்து, 3 முறை எம்எல்ஏவாக இருந்த குமரகுருவை கடந்த தேர்தலில் வீழ்த்திய திமுக மீண்டும் 7வது முறையாக அரியணை ஏற வேண்டுமெனில் இங்கு வென்றே ஆக வேண்டுமென்ற பிளாஷ் பேக்கால் தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்களாம். இதனால் கோட்டையை பிடிக்க பிள்ளையார் சுழிபோடும் உளுந்தூர்பேட்டையில் தேர்தல் களம் இப்போதே விறுவிறுப்பை எட்டியுள்ளதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.

Related Stories: