குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கோரி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,பிப்.3: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கோரி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைவேலுசாமி தலைமை வகித்தார். இதில், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத் தொகை மற்றும் முடக்தப்பட்ட அகவிலைப் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் கட்டபொம்மன், வட்ட தலைவர் சுந்தரராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Related Stories: