நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் நசீர் உசேன் (35). இவர் கோவையில் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அஸ்மா (27) நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த 6ம் தேதி திடீரென பிரசவவலி ஏற்பட்டது. கணவர் நசீர் உசேன் வீட்டில் வைத்தே மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதையடுத்து அவரது மனைவிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சம்பவம் வெளியே தெரிந்து விடாமல் இருக்க இரவோடு இரவாக குழந்தையின் உடலை புதைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் அப்பகுதியில் பரவியது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நசீர் உசேன் மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
