மீண்டும் திமுக ஆட்சிதான்: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

 

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த விழாவில் மாவட்டத்திலுள்ள வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளிலுள்ள 180 வார்டுகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘விவேகானந்தர் பக்திமானாக இருந்தாலும், விளையாட வேண்டும்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார். ஆகவே, நீங்கள் விளையாடியும், உடற்பயிற்சி செய்தும் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிறகும் திமுகதான் ஆட்சிக்கு வரும். அப்போதும் விளையாட்டு உபகரணங்களை வழங்குவோம்’ என்றார்.

Related Stories: