சென்னை : நீண்டகால பணியிடை நீக்கத்தில் உள்ள காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்க வழக்குகளை ஆய்வு செய்து, தகுதியானவர்களை பணியில் சேர்க்க காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. விரிவான அறிக்கையை வரும் பிப்ரவரி 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பணியில் இல்லாமல் காவலர்களுக்கு ஊதியம் தரக்கூடிய சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
