ஏரியில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஒபுலாபுரம் ஏரியில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு என கூறப்படும் இடங்கள் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

 

Related Stories: