ஊஞ்சவேலாம்பட்டி அருகே காலியிடத்தில் சருகுகளில் பரவிய தீ

*புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே உள்ள பல்வேறு கிராமங்களில், பழை குறைவால் ஆங்காங்கே செடிகள் காய்ந்து சருகுகளாக கிடக்கிறது. ஆனால் சில நேரத்தில், அந்த பகுதியில் தீ விபத்து உள்ளிட்ட விபரீதம் சம்பவம் நடைபெறுகிறது.

இதில், உடுமலை ரோடு ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் காலியிடத்தில் கடந்த சிலநாட்களாக வெயிலுக்கு, அங்கிருந்த செடி, கொடிகள் சருகு போல் இருந்துள்ளது. அதனை அப்புறப்படுத்தாமல் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீர் என அப்பகுதியில் தீப்பற்றியது.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவு காலியிடத்தில் காய்ந்த செடி கொடிகள் மற்றும் சருகுகள் வேகமாக எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. சில சமயத்தில் சுமார் 30 அடிவரை தீ எரிந்ததால், ரோட்டில் சென்றவர்கள் அச்சமடைந்தனர். மேலும், எரிந்த தீயிலிருந்து துகள்கள் வெளியேறி பறந்ததால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவதிப்பட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகே, அந்த தீ கட்டுக்குள் வந்தது. இருப்பினும், ரோட்டோரம் இருந்த காலியிடத்தில் சருகுகளில் தீ எரிந்து பொது மக்களின் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தீயணைப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியினரிடம் பரபரப்பு நிலவியது.

Related Stories: