சலுகை மேல் சலுகை ஏன்? பாகிஸ்தான் தங்கத்தை குறிவைத்த அமெரிக்கா: மெகா பிளான் அம்பலம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து தங்கத்தை வெட்டி எடுக்க அமெரிக்கா போட்டுள்ள மெகா பிளான் வெளிவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு அதிக சலுகை வழங்கி வருகிறார். மேலும் பாகிஸ்தான் அரசியலில் அதிக சக்தி கொண்ட முப்படை தளபதி அசிம்முனீரை, அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிபர் மாளிகைக்கு வரவழைத்து விருந்து வைத்துள்ளார்.

பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர் என்று கூறிக்கொண்டு பாகிஸ்தானுக்கு அதிக சலுகை அளிக்க என்ன காரணம் என்று விசாரித்த போது பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரூ.6 லட்சம் கோடி தங்கத்தை குறிவைத்து அமெரிக்கா களம் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பலூசிஸ்தானில் ரூ.6. லட்சம் கோடி மதிப்பு தங்கம் உள்ளது.

அந்த தங்கத்தை வெட்டி எடுக்க அமெரிக்கா முதல் கட்டமாக தற்போது ரூ.11 ஆயிரம் கோடி அங்கு முதலீடு செய்துள்ளது. 2028ஆம் ஆண்டுக்குள் ரூ.63 ஆயிரம் கோடி முதலீடு செய்து 2028ஆம் ஆண்டுக்குள் அங்கு தங்கத்தை வெட்டி எடுக்கும் பணி தொடங்கப்போவததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பலுசிஸ்தான் மாகாணத்தில் குறிப்பாக பாகிஸ்தான்-ஈரான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரெக்கோ டிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை கனேடிய சுரங்க நிறுவனம் பாரிக் மைனிங் கார்ப், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இணைந்து உருவாக்கி வருகிறது. அடுத்த 37 ஆண்டுகளில் அங்கு ரூ.6 லட்சம் கோடி வருவாய் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் தான் கடந்த ஒரு வாரமாக பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஆப்கன் போராளிகளை குறிவைத்து பாக். ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வரும் தகவலும் வெளியாகி உள்ளது.

Related Stories: