எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரம் மன்னிப்பு கேட்டார் இங்கிலாந்து பிரதமர்

லண்டன்: “எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த மான்டல்சனை வாஷிங்டனுக்கான இங்கிலாந்து தூதராக நியமித்த என்னை மன்னித்து விடுங்கள்” என இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்கான இங்கிலாந்து தூதராக பீட்டர் மான்டல்சனை கடந்த 2024ம் ஆண்டு நியமித்தார். பீட்டர் மான்டல்சன் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்துள்ளதாக மின்னஞ்சல் வௌியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எப்ஸ்டீனை ஸ்டார்மர் சந்திக்கவில்லை என்றாலும், பீட்டர் மான்டல்சன் எப்ஸ்டீன் தொடர்பு குறித்து வௌியான செய்திகளால் ஸ்டார்மர் அழுத்தத்தில் உள்ளார். இந்நிலையில் பீட்டர் மான்டல்சனை அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக நியமனம் செய்ததற்கு ஸ்டார்மர் மன்னிப்பு கோரி உள்ளார்.

இதுகுறித்து கெய்ர் ஸ்டார்மர் கூறுகையில், “மான்டல்சன் அலுவலகத்தில் முறைகேடு செய்ததாக இங்கிலாந்து காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அவர் மீது பாலியல் குற்றங்கள் எதுவுமில்லை. இருப்பினும், எப்ஸ்டீனுடனான தனக்கு தொடர்பு இல்லையென மான்டல்சன் பொய்யாக சித்தரித்தார். மான்டல்சனின் பொய்யை நம்பி, அவரை அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக நியமித்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: