216 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணம் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுச்சிஸ்தான் விடுதலை படையை (பிஎல்ஏ) தீவிரவாதிகள் கடத்தினர்.இதில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் அப்பாவி மக்கள் 31 பேர் பலியாகினர்.

இந்த மாகாணத்தில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு, கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் தீவிர வேட்டை நடத்தியது. தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறி வைத்து ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியது. 10 நாட்கள் நடத்திய வேட்டையில் 216 தீவிரவாதிகள், அப்பாவிமக்கள் 32 பேர், வீரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: