ஈரானில் நிலவும் சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

 

டெல்லி: ஈரானில் நிலவும் சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள இந்தியர்களுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. ஈரானில் பணிபுரிவோர், மாணவர்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை தூதரகம் வழங்கி வருகிறது. ஈரானுக்கு விமானம் சென்று வருவதில் பிரச்சனை எதுவும் இல்லை; அங்குள்ள இந்தியர்களை அழைத்துவர அவசியமில்லை. மாணவர்கள், ஊழியர்கள் உள்பட ஈரானில் 10,000 இந்திய குடிமக்கள் உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: