டெல்லி: நீட் முதுகலை கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பிற்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், ஹரிஷரன் தேவ்கன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுகலை மருத்துவப்படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோர் முன்பு விசரணைக்கு வந்த பொழுது மருத்துவர்களுடைய தரநிலை என்பது கேள்வி குறியாகியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மிக முக்கியமாக இந்த விவகாரத்தில் எதனால் இந்த நடைமுறை என்பது மேற்கொள்ளபட்டது என்பதை விளக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜனவரி 13ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் பல்வேறு கட் ஆஃப் மதிப்பெண் மாற்றம் செய்து மத்திய சுகாதார அமைச்சத்தினுடைய அறிவுறுத்தல் அடிப்படையில் அறிவிப்பானது வெளியிடப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட அறிவுகோளின் படி பொதுப்பிரிவுக்கான கட் ஆஃப் மதிப்பெண் என்பது 103ஆக இருந்தது. ஆனால் அது மாற்றப்பட்ட பிறகு முந்தைய மதிப்பெண்களின் 235லிருந்து – 40ஆக குறைந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கத்தை ஒன்றிய அரசு தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
