சென்னை: பணிக்காலத்தில் உயிரிழந்த வாரிசுதாரர்கள் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மாநகர் போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து கழகத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், ஓட்டுநர் (1) மற்றும் நடத்துனர் (18) என மொத்தம் 19 நபர்களுக்கு பணிக்கான நியமன ஆணைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
ஏற்கனவே, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 227 வாரிசுதாரர்களுக்கு பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 19 வாரிசுதாரர்களுக்கு பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், இணை மேலாண் இயக்குநர் சுந்தரபாண்டியன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
