*மாவட்ட திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு
ஆரணி : ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ்.வி.நகரம், வடுக்கசாத்து, கல்பூண்டி, நேத்தப்பாக்கம், வேலப்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டம், கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளான ஏரி கால்வாய் தூர்வாரும் பணி, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிகள், தார்சாலைகள், சிமெண்ட் சாலை அமைத்தல், சமுதாய கூடம், ஊராட்சிமன்ற அலுவல கட்டிடம், நாடக மேடை, 100 வேலை திட்டம், கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் மறு கட்டுமான வீடுதிட்டம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் என ரூ.20 கோடியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் மணி அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பல்வேறு ஊராட்சிகளில் முடிவுற்ற வளர்ச்சி பணிகள், நடைப்பெற்று வரும் பணிகளின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது உதவி செயற்பொறியாளர் கவிதா, பிடிஓக்கள் சத்யா, விஜயலட்சுமி, உதவி பொறியாளர் மதுசூதனன், ஒன்றிய பொறியாளர்கள் ஜெயலட்சுமி, சிவக்குமார், ஊராட்சி செயலாளர்கள் குமரகுரு, தனஞ்செழியன், தயாளன், வெங்கடேசன், துரை முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
